Latest News

நகைச்சுவை நடிகர் தவசிக்கு இலவசமாகப் புற்றுநோய் சிகிச்சை... திமுக எம்.எல்.ஏ சரவணன் உதவி!

நகைச்சுவை நடிகர் திரு.தவசி அவர்கள் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் எம்.எல்.ஏ அவர்கள் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

இதுகுறித்து டாக்டர்.சரவணன் கூறியதாவது, "திரு.தவசி அவர்கள் 11.11.2020 அன்று உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

140-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், எங்களது கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் "கண்ணே கலைமானே" திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படப்பிடிப்பு தளத்தில்தான் எனக்கு இவர் அறிமுகமானார்.

இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால், அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால், வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும்" என்றார் டாக்டர் சரவணன்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.