
சசிகலா என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை, தாம் இயக்க உள்ளதாக தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஆனாலும், இவர் தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர்.
ஆந்திர முன்னாள் முதல்வர், என்.டி.ராமாராவின் மனைவி லட்சுமி சிவபார்வதி குறித்தும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் அரசியல் பிரவேசம் குறித்தும் இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், சசிகலா என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படம் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும், இந்த படத்தின் ட்ரைலர் காட்சி வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்தில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட உள்ளார். இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சசிகலா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment