
இனி வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதற்கு ஒரு சில முக்கிய மாற்றங்களை, மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதற்கான வழி முறைகளில் ஒரு சில மாற்றம் செய்து மத்திய அரசு இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் வெளிநாட்டு நிதி உதவி பெற முடியாது" என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment