
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் மோசடி வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.62 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வீட்டில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் கணேசனை காவல்துறை கைது செய்துள்ளது.
No comments:
Post a Comment