Latest News

கோயம்பேடு : கணிசமாக குறைந்த பெரிய வெங்காயத்தின் விலை

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

வடமாநிலங்களில் மழைப்பொழிவு காரணமாக தமிழ்நாட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்து ஒரு கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து வரக்கூடிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும், கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும், மகாராஷ்டிராவிலிருந்து வரக்கூடிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.