
நிலாவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி அங்கிருந்து கற்களை கொண்டு வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்கலத்தையும் தயார் படுத்தி வருகிறது.
நிலாவின் தன்மை குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவில் இருந்து கூட நிலாவுக்கு ஆளில்லா விண்கலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. அமெரிக்கா தான் 1969-ம் ஆண்டு முதன்முறையாக நிலாவில் கால் பதித்தது. அப்போது அங்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கற்கள், மணல் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்தனர். அதனை வைத்து பல்வேறி ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன.

அடித்ததாக ரஷ்யா லூனா 24 என்ற ஆளில்லா விண்கலத்தை நிலாவுக்கு அனுப்பி 170 கிராம் எடை கொண்ட கற்களை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தது. இந்நிலையில் சீனாவும், நிலாவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி அங்கிருந்து கற்களை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்கலத்தை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment