
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டதால் இந்தியாவின்பொருளதாரம் பெரும் சரிவை சந்தித்த்து. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்தி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்துக்கான பொருளாதாரப் புள்ளி விவரங்களின்படி வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு வரும் என கணித்துள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.6 சதவீதம் வீழ்ச்சியடையும் எனப் பணக்கொள்கைக்கான குழு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment