
கரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாக உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. படிப்படியாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு இப்போது பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேரேம் கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 4 கேள்விகளை பதிவு செய்து பிரதமர் மோடி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
1. கரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதனைத் தேர்வு செய்யும்? ஏன்?
2. கரோனா தடுப்பூசியை முதலில் யார் பெறுவார்கள்? அவர்களின் விநியோக உத்தி என்னவாக இருக்கும்?
3. கரோனா தடுப்பூசி இலவசம் என்பதை உறுதிப்படுத்த பி.எம்.கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படுமா?
4. அனைத்து இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும்?
No comments:
Post a Comment