
கவுகாத்தி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், 3 முறை அசாம் மாநில முதல்வராக பதவி வகித்தவருமான தருண் கோகாய் (82) மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக, மீண்டும் கடந்த 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், உடல் நிலை மிகவும் மோசமடைந்த தருண் கோகாய் பல உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தொடர் சிகிச்சை பலனின்றி உடல்நல குறைவால் கோகாய் இன்று காலமானார்.
No comments:
Post a Comment