Latest News

தற்போது தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதாக டுவிட் வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றுவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் . அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியிருந்தார் . அவ்வாறு தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்லி நீதிமன்த்தில் வழக்கு தொடர்வேன் என்று கூறி கொண்டிருந்தார் . தொடர்ந்து , ஜோ பைடனின் வெற்றி என்பது மோசடியான ஒன்று என தொடர்ந்து குற்றம்சாட்டி கொண்டு வருகிறார். இதனிடையே டொனால்ட் டிரம்ப் இன்று வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார் . ஆனால், டிரம்பின் பதிவை பொய்யான தகவல் என்று தெரிவிக்கும் வகையில் அந்த பதிவை மேற்கோள் காட்டி டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது .

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.