
ஜெய்ப்பூர்: 'லவ் ஜிகாத்' என்பது இந்தியாவை துண்டாக்கவும் சமூக
ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் பா.ஜ.,வினர் உருவாக்கிய சொல் என ராஜஸ்தான்
முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.ஒரு பெண்ணை காதலித்து, அவரை
கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, மணம் புரிவதை, 'லவ் ஜிகாத்'
என்கின்றனர். அவ்வாறு கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்வோருக்கு,
ஜாமினில் வர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த, மத்திய
பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பா.ஜ., ஆளும், ஹரியானா, உ.பி.,
போன்ற மாநிலங்களும், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டமியற்ற திட்டமிட்டு
உள்ளன.இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது டுவிட்டர்
பக்கத்தில் பதிவிட்டதாவது: 'லவ் ஜிகாத்' என்பது இந்தியாவை துண்டாக்கவும்
சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் பா.ஜ.,வினர் உருவாக்கிய சொல்லாகும்.
திருமணம் என்பது தனிப்பட்ட சுதந்திரம் தொடர்புடையது.
அதைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது முற்றிலும்
அரசியலமைப்பிற்கு விரோதமானது. காதலில் ஜிகாத்துக்கு இடமில்லை. இவ்வாறு அவர்
பதிவிட்டார்.
No comments:
Post a Comment