Latest News

"பன்முகத்தன்மை என்ற பெயரில் பாழும் கிணற்றில் விழ முடியுமா என பல்கலை நிர்வாகம் நினைத்திருக்கலாம்..."

ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது, ஒரு சமுதாயத்தின் பன்முகத் தன்மையை அழித்து விடும்.- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி'பன்முகத்தன்மை என்ற பெயரில், பாழுங்கிணற்றில் விழ முடியுமா என, பல்கலைக்கழக நிர்வாகம் நினைத்திருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை.பெரும்பாலான மக்களுக்கு உணவு இல்லை; தொழில் இல்லை; வேலை இல்லை; பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரிடம் பணம் இல்லை; பலருக்கும் முழு சம்பளம் இல்லை. இதைப் பற்றி பேசாத பிரதமர், கொரோனா முக கவசம் அணியுங்கள் என்பதால் தான், வெறுப்பை சம்பாதிக்கிறார்.- எம்.பி., ஜோதிமணி'உங்கள் தலைவர் ராகுல், விதண்டாவாதம் பேசியே, மக்கள் எதிர்ப்பை சம்பாதிக்கிறாரே...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி.மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது, பண்பாடு அல்ல. ஆனால், ஜெயலலிதா குறித்து, தி.மு.க., குடும்ப பத்திரிகையில், மோசமாக எழுதுகின்றனர். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது, அநாகரிகமான அரசியல். இது தொடர்ந்தால், பொறுத்துக் கொள்ள மாட்டோம். அவர்கள் மானம் கப்பல் ஏற செய்வோம்.- அமைச்சர் ஜெயகுமார்'பழைய கதைகளை எழுதினால் தானே, பழம்பெரும் கட்சி என்ற பெயரை தக்க வைக்க முடியும்...' என, நினைவூட்டத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி.பா.ஜ., சார்பில் நடத்தப்படும் வேல் ரத யாத்திரை என்பது மத நம்பிக்கைக்காக அல்ல.

அரசியல் செய்யத் தான். தமிழக அரசு இந்த யாத்திரைக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்தாலும், தொடர்ந்து, யாத்திரை என்பது நடந்து வருவது, இரண்டு கட்சிகளும் சேர்ந்து நடத்தும் நாடகமாக தெரிகிறது.- மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஜி.ராமகிருஷ்ணன்'இந்த சந்தேகம், தமிழக மக்களுக்கும் உள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.பா.ஜ., தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கிறது. கூட்டணியில் உள்ள ஒரு கட்சி, ஒரு முடிவு எடுக்கும்போது, அதை கூட்டணியில் உள்ள கட்சி முழுமையாக ஆதரிக்க வேண்டும். அது, கூட்டணி கட்சிகளின் கடமையாகும்.- தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன்'கூட்டணி கட்சிக்கே, அறிவுரையா...

இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் நிபந்தனையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு.கத்துபவர்கள் கத்தட்டும்; வெறி நாய்களும், சொறி நாய்களும் குரைக்கட்டும்; திரும்பிப் பார்க்காதீர்கள். கவலைப்படாமல் இலக்கு நோக்கி பயணியுங்கள். பயணத்தை நிறுத்தாதீர்கள்; சந்திப்பை சலிப்பின்றி நிகழ்த்துக!- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி'எதிராளிகள் சொல்வது, உங்க காதுல விழுந்திருச்சா... அப்படியே, 'ரிப்பீட்' பண்றீங்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.வேல் யாத்திரையால், தமிழகத்தில் கலவரம் வெடிக்கும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது, பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

அரசு, கவனமாக இருக்க வேண்டும். எங்கள் யாத்திரை, அமைதிக்கானது.- பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்'அரசு கவனமாக இருப்பதால் தான், யாத்திரை செல்லும், பா.ஜ., தலைவர்களை தொடர்ந்து, கைது செய்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி.கமலை இனிமேல் கூட்டணிக்கு அழைக்கப் போவதில்லை; கமல் ஒரு இடத்திற்கு சென்ற பிறகு கூட்டணிக்கு அழைப்பு விடுப்பது பொருத்தமானதாக இருக்காது.- தமிழக காங்., தலைவர் அழகிரி'அவரை, உங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டால், முதல்வர் பதவி அவருக்கு கிடைக்காமல் போய் விடுமே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி.முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கொஞ்சம் கூட, நன்றி உணர்வு இல்லாதவர்கள். அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், குறைந்தபட்ச அரசியல் ஞானம் கூட இல்லாதவர்.- நாஞ்சில் சம்பத்'அப்படியே, உங்களைப் பற்றியும், சுய விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள நாஞ்சில் சம்பத் பேட்டி.அடிக்கடி கை கழுவுங்கள் என்பது, கொரோனா சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள் என்பது, பீஹாரில் மோடி உணர்த்திய பாடம்; வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!- நடிகை குஷ்பு'ஒரு காலத்தில் தமிழே பேச வராமல் தவிச்சீங்க...

இப்போ, தமிழில் புகுந்து விளையாடுறீங்களே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், பா.ஜ.,வில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு அறிக்கை.பீஹார் சட்டசபை மற்றும் பிற மாநில இடைத் தேர்தல்களில் பெருவாரியான இடங்களில், பா.ஜ., வென்றுள்ளது. பா.ஜ., வென்றதை பாராட்ட மனமில்லாமல், ஓட்டு இயந்திரத்தின் மீது பழியை போடுகின்றனர், எதிர்க்கட்சியினர்.- மாநில, பா.ஜ., பொருளாளர் சேகர்'இது, எதிர்க்கட்சிகளின் வழக்கமான அணுகுமுறை தான்; புதிதாக ஒன்றுமில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், மாநில, பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.என் தந்தை, 1970ம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார். நடராஜ் என, அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டதால், கவுண்டர் என்பதை வைத்துக் கொண்டேன். என் பெயரை நீக்கமாட்டேன். அது என் அடையாளம், வரலாறு.- இந்திய பெண் டாக்டர் செலின் கவுண்டர்'வித்தியாசமான பெண்ணாக இருக்கிறீர்களே; தமிழ் ரத்தம் ஓடுவதால் தான், ஜாதியை பெருமையாக கருதுகிறீர்களோ என, எண்ணத் தோன்றுகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய பெண் டாக்டர் செலின் கவுண்டர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.