
கடந்த சில காலமாக விவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனைங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்நிறுவனம் வெளியீடு செய்யும் எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் இந்தியாவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்த தருணத்தில் புதிய விவோ Y51 (2020) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம். இந்த புதிய விவோ Y51(2020) ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை பெற்றுள்ளது , பின்பு 1080×2340 பிக்சல் ரெசொலூஷன் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த விவோ Y51(2020) ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரி வசதி இணைக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் , 2எம்பி மேக்ரோ லென்ஸ் , 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த விவோ Y51(2020) ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இந்த விவோ Y51(2020) மாடல் ஸ்மார்ட்போன் ரூ.16,346 -விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment