
தமிழக்கத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு
பருவமழை தொடங்கியது முதல் சென்னை, கடலூர், திருவள்ளூர் என பெரும்பாலான
மாவட்டங்களில் கனமழை பெய்தது. பருவமழை முடிவதற்கு முன்பே தமிழகத்திற்கு
இந்த காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய இயல்பான மழை அளவை விட கூடுதலாக மழை
கிடைத்துள்ளது.

வழக்கமாக புயலுக்கு முன்னும் பின் என்ற சொல் உண்டு. அதேபோல் இரு புயல்களுக்கு பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டியது நினைவுக்கூறத்தக்கது.
இந்த நிலையில் வருகின்ற 16 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பெய்த மழை அதனால் நிலவும் ஈரப்பதம் காரணமாக குளிர் அதிகமாக உணரப்படுகிறது. இம்மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என்பதினால் அதற்குள்ளாக இயல்பான மழை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனினும் அடுத்த 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
newstm.in
No comments:
Post a Comment