
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு கணவனும், மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு மாக்கெட் சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த ஒரு கும்பல் கணவன் மனைவியை மடக்கி பிடித்து கணவனை பிணைக்கைதியாக பிடித்து மனைவியை கொடூரமாக 17 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பெண்ணை சீரழித்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மாதங்களில் இந்த விசாரணைகளை முடிப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜார்க்கண்ட் டிஜிபிக்கு மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். இரவு நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment