
படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் எதிர்கால நலன் கருதி, சென்னையில் வரும் 18-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள, பட்டியலினம் மற்றும் பழங்குடியினவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தில், அதாவது வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டிடம், மூன்றாவது மாடியில், காலை ஒன்பது 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை, வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.

பிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, நுகர்வோர் பொருள்கள் , மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த முகாமில், படித்து வேலை தேடுபவர்கள்மற்றும் அனுபவமிக்கவர்கள் என 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்கள் ஆவணங்களின் அசலையும், நகல்களையும் எடுத்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment