Latest News

திருப்பூரில் 2ஆவது நாளாக தபால் நிலையம் முற்றுகை

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் தலைமை தபால் நிலையத்தை 2 ஆவது நாளாக முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 78 பேரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர், ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை 2ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடி மற்றும் மக்காச்சோளப் பயிர்களை ஏந்தியபடி வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பவித்ரா, வேலம்பாளையம் நகர கட்சி செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 11 பெண்கள் உள்பட 78 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.