
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாகவும், கடலூர், நாகை, ராமநாதபுரத்தில் அதீத கனமழை தொடரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ். பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது, மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மேலும் வலுவிழந்து மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும்.
இதன் காரணமக 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த 24 பதிவான மழையின் அளவைப் பார்க்கும் போது, தமிழகத்தில் 11 இடங்களில் அதி கனமழையும், 20 இடங்களில் மிகக் கனமழையும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
தமிழகம்
மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை பெய்ய
வேண்டிய இயல்பான மழையின் அளவு 373 செ.மீ. ஆகும். ஆனால், இதே
காலக்கட்டத்தில் தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவு 364 செ.மீ. ஆகும். இது
இயல்வை விட 2% குறைவு.
No comments:
Post a Comment