
சூப்பர் ஸ்டார் ரஜினி புதிதாக துவங்க உள்ள புதிய கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பலருக்கும் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி அண்மையில் அரசியலுக்கு வருவதை உறுதி செய்த நிலையில், தனது புதிய அரசியல் கட்சியை வரும் 2021-ம் ஆண்டில் ஜனவரியில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், அது தொடர்பான தகவல்களை வரும் 31-ம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் கட்சியின் முக்கிய பணிகளை கவனிக்க தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகிய இருவரை நியமனம் செய்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தைப் பொருத்தவரை தற்போது 36
மாவட்ட செயலாளர்கள் மட்டுமே உள்ளர். இதனால், கட்சியாக மாற்றிய பின்னர்,
நிர்வாக வசதிக்காக
60 மாவட்ட செயலாளர்களாக பிரிக்கப்பட உள்ளது. இதனால்,
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள பலருக்கும் உயர் பதவிகிடைக்க வாய்ப்பு
உள்ளது. ஆனால், 60 மாவட்ட செயலாளர்களையும் நியமிக்கும் அதிகாரம் அர்ஜுனா
மூர்த்திக்கு ரஜினி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதானல்,
இத்தனை வருடங்களாக மன்றத்து பணிகளை செய்து வந்த ரசிகர்கள், தங்களுக்கு
அர்ஜுனா மூர்த்தி பதவி வழங்குவாரா என்று சந்தேகத்துடன் உள்ளார்கள்.
தலைவரும், முதல் முறை தனது அரசியல் பயணம் குறித்து பேசும் பொழுதே, பதவியை
எதிர்பார்த்து யாரும் கட்சிக்குள் வரவேண்டாம் என்று இதைத் தான் கோடிட்டு
காட்டியுள்ளார் என்கிறார்கள்.
No comments:
Post a Comment