
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராமன் பல்லா தலைமையில் காங்கிரஸ் தலைமையகத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தில்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், மத்திய அமைச்சர்கள் இன்று விவசாயிகளுடன் 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் ஹம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராமன் பல்லா பேசியதாவது, ''புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளையும், வாய்ப்புகளையும் திறக்கும் என்று பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் சீர்குலைத்துவிடும்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களால் நாட்டின் அனைத்து விவசாயிகளும் கடும் கோபமடைந்துள்ளனர்'' என்று கூறினார்.
No comments:
Post a Comment