விருதுநகர் : விருதுநகரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை அவதுாறாக
பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை தி.மு.க.,வினர்
பல்வேறு இடங்களில் எரிக்க முயற்சி செய்தனர். எதிர்த்து அ.தி.மு.க.,வினரும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். விருதுநகரில்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை
சந்தித்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆ.ராஜா குறித்து கடுமையாக
விமர்சித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் நேற்று
காலை எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் தேசபந்து மைதானத்தில் குவிந்தனர்.
அமைச்சரின் உருவ பொம்மை எரிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும்
கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி.மு.க.,வினரை கண்டித்து அ.தி.மு.க., அவை தலைவர்
விஜயகுமரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்டோர் வந்தனர். இருதரப்பினரும்
நேருக்கு நேர் வாக்குவாதம் செய்து மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
தி.மு.க.,வினர் 167 பேர் கைது செய்யப்பட்டனர்.ராஜபாளையம் காந்தி சிலை அருகே
அமைச்சர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தி.மு.க.,வினருக்கும்,
அ.தி.மு.க.,வினருக்கும் மோதல் ஏற்பட்டது. தென்காசி - ராஜபாளையம் நெடுஞ்சாலை
போர்க்களமானது.
செருப்பு வீச்சில் இருதரப்பினரும் ஈடுபட்டனர். மூன்று மணி நேரமாக இருதரப்பினரும் கலைந்து செல்லாமல் இருந்தனர். எஸ்.பி., பெருமாள் எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி செய்து கூட்டத்தை கலைத்தனர். தி.மு.க., எம்.பி., தனுஷ்குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் உட்பட 207 பேரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, சாத்துாரில் அ.தி.மு.க.,வினர் ஸ்டாலின், ராஜா, எம்.எல்.ஏக்கள் தங்கம்தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் உருவ பொம்மைகளை எரித்தனர்.
இருதரப்பிலும் 1350 பேர் கைது செய்யப்பட்டனர். தி.மு.க.,அழுகிய தக்காளி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிசிவகாசி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ''தி.மு.க.,வினரை நாங்கள் தரக்குறைவாக பேசியது கிடையாது. ஸ்டாலின், ராஜா எங்கள் தலைவர்களை ஒருமையில் பேசி வருகின்றனர். அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
முதல்வரை பார்த்து உனது பிறப்பு உண்மையாக இருக்குமேயானால் என்று ராஜா கேட்கிறார். அவரை திருப்பி கேட்க எவ்வளவு நேரம் ஆகும். ஸ்டாலினின் திமிரை ஒடுக்குவது தான் எங்களது வேலை. ஸ்டாலின் உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை சேகரித்து வருகிறோம்.
தி.மு.க., அழுகிப்போன தக்காளி, கூட்டு வைக்கவும் உதவாது குழம்பு வைக்கவும் உதவாது'' என ஆவேசமாக கூறினார்.கடைசி எச்சரிக்கை சாத்துார் ராமச்சந்திரன் கோபம்விருதுநகரில் தி.மு.க., எம்.எல்.ஏ., சாத்துார் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜேந்திரபாலாஜி அமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர். நாகரீகமாக பேச தெரியாதவர். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஸ்டாலினை தரம் தாழ்ந்து விமர்சித்தது மட்டுமில்லாமல் ஒருமையில் பேசி இருக்கிறார். ராஜேந்திர பாலாஜி தன்னை திருத்தி கொள்ளவில்லை என்றால் திருத்தப்படுவார். அவரது நாக்கை எப்படி அடக்க வேண்டும் என ஒவ்வொரு தி.மு.க., தொண்டனுக்கும் தெரியும். இது தான் கடைசி எச்சரிக்கை, என்றார்.

No comments:
Post a Comment