
ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சிக்கு நடந்த
தேர்தலில் பா.ஜ., 80 க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலையில் உள்ளது.150
வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு டிச.,1ல் தேர்தல் நடந்தது.
மாநிலத்தை ஆளும் டிஆர்எஸ், பாஜ, காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட
கட்சிகள் போட்டியிட்டன. பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்
பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், டிஆர்எஸ் - பாஜ இடையே நேரடி போட்டி
ஏற்பட்டது.இந்நிலையில், மாநகரட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி
எல்பி ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்புடன் துவங்கியது.முடிவுகள் தெரிந்த 139
வார்டுகளில் பா.ஜ., 88லும், டிஆர்எஸ் 32லும், ஏஐஎம்ஐஎம் 17லும் காங்கிரஸ் 2
வார்டிலும் முன்னிலையில் உள்ளன.
No comments:
Post a Comment