Latest News

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: தில்லி - உ.பி. எல்லை முற்றுகை

காஸியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தில்லி - உத்தரப்பிரதேச எல்லையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்ட நிலையில், தில்லி - உத்தரப்பிரதேச எல்லையை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத் தலைவர்கள் டிசம்பர் 14-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயத் தலைவர் கன்வால்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று 18-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ஓரிடத்திலமர்ந்து சிறைப்பட்டு போராட்டத்தில் ஈடுபடாமல், எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். காஸியாபாத்தின் காஸிபூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.