
தமிழகத்தில் செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, செல்போனுக்கு யாராவது போன் செய்து, உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது என ஆசை காட்டி, பேனினாலோ அல்லது செல்போனில் உள்ள லிங்கை கிளிக் செய்ய சொன்னால் அது போன்ற தவறுகளில் ஈபடு வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோன்று, செல்போன் ஆப்கள் சில, உடனடியாக கடன் தருவதாகக் கூறி குறுந்தகவல்களை அனுப்புகின்றன. அதை நம்பி சிறிய தொகைதானே என்று கடன் வாங்க நினைக்கும், நபர்களுக்கு செயல்பாட்டுக் கட்டணம் என்று ரூ.1,500 பிடித்தம் செய்யப்படுகிறத என்றும், எனவே, செல்போன் பயன்படுத்துவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பலரது வீடுகளில் குழந்தைகள் அழும்போது அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் செல்போன் தரப்படுகிறது. அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் , நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது மிகவும் தவறான செயல் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்களின் அறிவுரையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment