
ரஜினி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா என்னிடம் கேட்டார். ரஜினி முடிவு செய்தால் மட்டுமே எதையுமே உறுதியாக சொல்ல முடியும் என அவரிடம் கூறினேன் என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி, சென்னை போயஸ் கார்டனில் புத்தாண்டு அன்று புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன் என தெரிவித்தார்.
ரஜியின் நிலைப்பாடு குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறத்தும் பிரபல தொலைகாட்சிக்கு ஒன்றுக்கு பாஜகஆதரவாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
அதில், கடந்த 25 வருடமாக தமிழகத்திற்கு சாபமான சூழல் ஏற்பட்டது. தற்போது ரஜினியின் அறிவிப்பு அதை மாற்றும் என நம்புகிறேன். ரஜினியை ஒரு நடிகராக யாரும் பார்க்கவில்லை. அவரை ஒரு நல்ல மனிதராகத்தான் பார்க்கிறார்கள். எனவே, ரஜினியும், மோடியும் ஒன்று சேர்ந்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும் என்றார்.
மேலும், ரஜினியின் அரசியல் வருகையால் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளில் பல மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். முன்பு தமிழகத்தில் இரு பெரும் அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். தற்போது அவர்கள் இல்லை. இதனால், போட்டி நிலவுகிறது.
ரஜினியிடம் இதை தான் செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. அவர் என்னிடம் கருத்துக் கேட்டார் அதற்கு மட்டும் பதில் தெரிவிதேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment