
ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்சியர் கதிரவன் தலைமையில் மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று மனு நீதி திட்ட முகாம் நடந்தது. ஆட்சியர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் கே .எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். ரூ.9.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்த முகாமில் 110 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. முதியவர்களுக்கு உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, ஸ்மார்ட் கார்டு, இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், கேசவமூர்த்தி,முருகசேகர், தங்கமுத்து ,ராமசாமி, உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment