Latest News

அதிமுக - பா.ஜ., ஒரே டீம் தான்! கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி

கோவை: 'பா.ஜ.,வின் 'பி' டீம் அ.தி.மு.க.,' என்ற தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி கருத்துக்கு, 'அ.தி.மு.க., - பா.ஜ., ஒரே டீம்' என, எச்.ராஜா பதிலளித்துள்ளார்.கோவையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கற்பனையான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. நாட்டுக்கு எதிரான தீய நோக்கத்துடன் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன.தி.மு.க., பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின், முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். தி.மு.க.,வினர் இந்துக்களுக்கு எப்போதுமே எதிரிதான்.'பா.ஜ.,வின், 'பி' டீம் அ.தி.மு.க.,' என, தி.மு.க., மகளிரணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். அப்படி இல்லை. அ.தி.மு.க., - பா.ஜ., ஒரே டீம் தான். சசிகலா வருகையால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படாது. அது அவர்களின் உட்கட்சி பூசல்.

இன்று இரு வேறு துருவங்களாக இருக்கலாம்; நாளை இருவரும் ஒன்றிணையலாம். பா.ஜ., நிர்வாகி கல்யாணராமனை கைது செய்தது பாரபட்சமானது. ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை, ஏன் கைது செய்யவில்லை. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.