
தென் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதோடு, அந்த ரயில்கள் வாரத்திற்கு மூன்று முறை செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை, மங்களூர் வழியாக நெல்லையில் இருந்து மும்பை வரை ஏற்கனவே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கூடுதலாக சேலம், தருமபுரி, ஹீப்ளி வழியாக ஒருவாரத்திற்கு மூன்று முறை செல்லும் சிறப்பு ரயிலை நெல்லையில் இருந்து மும்பைக்கு இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மும்பை தாதர் - நெல்லை சிறப்பு ரயில் வரும் 27 ஆம் தேதி முதல் சனிக்கிழமை , செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமைகளில் அங்கிருந்து புறப்படும். அதே போல் மறுமார்க்கத்தில் நெல்லை - தாதர் வாரம் மார்ச் 1 முதல் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 03.00 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படுவதோடு, ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
newstm.in
No comments:
Post a Comment