
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கால் பதிக்க பாரதிய ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி எதற்கும் அசைந்து கொடுக்காமல் பாஜகவுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசி வருகிறார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான தினேஷ் திரிவேதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மேற்கு வங்க மக்களுக்காக உழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெறும் அதிரடி அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
newstm.in
No comments:
Post a Comment