
பணக்காரர்களுக்காக, பணக்காரர்களின், பணக்காரர்களால் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து அனல் பறக்க பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பணக்காரர்களுக்காக, பணக்காரர்களின், பணக்காரர்களால் தயாரிக்கப்பட்டது இந்த பட்ஜெட். இது இந்தியாவின் மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே நாட்டின் 73 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது.
மத்திய பட்ஜெட்டில் தொடர்ந்து அவதிப்படும் ஏழை மக்களுக்கு எதுவும் இல்லை. கொரோனா வைரசுக்கு முன் இரண்டு ஆண்டுகள் பொருளாதார மந்தநிலை இருந்தது என்பது உண்மை. 3 வருட திறமையற்ற பொருளாதார தவறான நிர்வாகத்தை நாடு கண்டது. எனவே, நாங்கள் எங்கள் வலுவான எதிர்ப்பையும், அதிருப்தியையும் பதிவு செய்ய வேண்டும். இந்த கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் ஆண்டோலஞ்சீவி மற்றும் பர்ஜீவி என்று அழைக்கப்படுவோம்.

பணப்பரிமாற்றம் மற்றும் ரேஷன் வழங்குவதன் மூலம் மக்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். இல்லையெனில் ஏழைகள் விழித்துக்கொள்வார்கள் மற்றும் வன்முறையற்ற, அமைதியான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை காண்பிப்பார்கள். வளர்ச்சியை தூண்டுவதில் அரசாங்கம் தவறிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை 3 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment