கடலுார்; கொரோனா சித்த மருத்துவ மையத்தை காலி செய்யாததால், கடலுார் அரசு கல்லுாரியில் இடவசதியின்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. ஆன் லைனில் வகுப்புகளும், கல்லுாரிக்கு ஆன் லைனில் தேர்வுகளும் நடத்தப்பட்டன.இந்நிலையில், தொற்று குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன் கல்லுாரிகளில் படிப்படியாக வகுப்புகள் துவங்கின. நேற்று முதல் கடலுார் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலும் முழுமையாக வகுப்புகள் இயங்கின.கல்லுாரிக்கு வந்த மாணவர்களுக்கு 'தெர்மோ ஸ்கேனர்' மூலம் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டதுடன், முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனர். வகுப்பறையில் சமூக இடைவெளியடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் கடலுார் அரசு கலைக் கல்லுாரி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முதலாண்டு மாணவர்களுக்கும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படும் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிற நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.மரத்தடியில்கொரோனா பாதித்தவர்களுக்கு முழுமையான சித்த மருத்துவ சிகிச்சையளிக்க, கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி வளாகத்தில் 150 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.இங்கு சிகிச்சை பெற்றவர்கள் முழுமையாக குணமடைந்த நிலையில், தற்போது மையத்தில் யாரும் இல்லை. ஆனாலும், கொரோனா மையத்திற்கு பயன்படுத்திய கட்டடங்களை, கல்லுாரி சார்பில் கடிதம் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்கவில்லை.இதனால் நேற்று கல்லுாரி வந்த மாணவர்கள், சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர இடவசதியின்றி, மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...
-
அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...
-
புது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...
-
புதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...
-
வாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...
-
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...
-
திருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...

Blog Archive
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)

No comments:
Post a Comment