திருப்பூர்:சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திருப்பூர் மாவட்டம்,
கடந்த இரு நாட்களாக,முதல்வர் பழனிசாமி மற்றும் தி.மு.க., எம்.பி., கனிமொழி
ஆகியோரது பிரசாரத்தால் அமர்க்களமானது. தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள்
வருகை தர உள்ளதால், தேர்தல் நாள் வரை பிரசாரம் களைகட்ட போகிறது.சட்டசபை
தேர்தலுக்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை
தொகுதிகளை கைப்பற்றுவதை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியினர்
'கவுரவமாக' கருதுகின்றனர்.காங்., முன்னாள் தலைவர் ராகுல், மக்கள் நீதி
மையம் தலைவர் கமல் ஆகியோர் ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில், பிரசாரத்தை
நிறைவு செய்துள்ளனர்.நேற்றுமுன்தினம், அவிநாசியில் பிரசாரத்தை துவங்கிய
முதல்வர் பழனிசாமி, பாண்டியன் நகர், வளர்மதி ஸ்டாப் பகுதிகளிலும் பிரசாரம்
செய்தார்.பின், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளில் பேசினார்.
நேற்று, உடுமலை, பல்லடத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
முதல்வருக்கு, அ.தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணிக்கட்சியினர் மட்டுமல்லாது,
வழிநெடுகிலும், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு
அளித்தனர்.இதேபோல், நேற்றுமுன்தினம், தி.மு.க., எம்.பி., கனிமொழி, சேவூரில்
பிரசாரம் மேற்கொண்டார். கருவலுாரில்,மகளிர் கிராம சபையில்
பேசினார்.தத்தனுாரில் சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினரையும்,
முருகம்பாளையத்தில் சாய ஆலை துறையினரையும் சந்தித்தார். ஆண்டிபாளையம்
'வனத்துக்குள் திருப்பூர் ' குழுவினரை சந்தித்த கனிமொழி, இச்சிப்பட்டியில்
விசைத்தறியாளர்களுடன் கலந்துரையாடினார்.
பல்லடம் நால்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கோழிப்பண்ணை உரிமையாளர்களையும் சந்தித்து பேசினார். கள்ளிப்பாளையத்தில், மகளிர் கிராம சபையில் பங்கேற்றார். நேற்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.முதல்வர் பழனிசாமி, கனிமொழி ஆகியோரது வருகை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க..,வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த இரண்டு நாட்களில், மாவட்டத்தில், எதிரெதிர் துருவங்கள் பிரசாரம் மேற்கொண்டது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், அவர்கள் பிரசாரம் செய்த பகுதிகளில், போக்குவரத்து நெரிசல், நிறுத்தம் போன்ற வற்றால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர், விரைவில், திருப்பூருக்கு பிரசாரத்திற்கு வர உள்ளனர். நேற்றைய பிரசாரத்தால், திருப்பூர் அமர்க்களமானது.தேர்தல் நாள் வரை தலைவர்கள் வருகை, பிரசாரம் என களைகட்டும் என்பது உறுதி. கட்சியினருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் தலைவர்களின் வருகை, பொதுமக்களுக்கு இடையூறுகளையும்ஏற்படுத்தப்போகிறது!

No comments:
Post a Comment