
பா.ஜ.க. இந்தியாவை ஒரு தகனமாக மாற்றியுள்ளனர். மேற்கு வங்கத்தையும் அதேபோல் மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கம் பர்த்வானில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: சில மோசமான பசுக்கள் (பா.ஜ.க.வுக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்) தங்கள் தவறுகளை மறைக்க முயற்சிக்கின்றன. அவை போய் விட்டது. தீமை விலகி விட்டது. திரிணாமுல் காங்கிரசில் இருந்தபோது அதன் நன்மைக்கு யோசிக்காதவர்கள், அவர்கள் கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன்.
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு உணவளிப்பாள், அவர்களை வளர்ப்பாள். தாய் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது ஏதாவது தேவைப்படும்போது இந்த குழந்தைகள் அவளை காட்டிக்கொடுத்து விட்டு தப்பி ஒடுவார்கள். இந்த குழந்தைகள் கெட்ட குழந்தைகள். அவர்கள் நல்ல குழந்தைகளாக இருக்க முடியாது. பா.ஜ.க. இந்தியாவை ஒரு தகனமாக (சுடுகாடாக) மாற்றியுள்ளனர். மேற்கு வங்கத்தையும் அதேபோல் மாற்ற விரும்புகிறார்கள். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக வேறு சில பொதுக்கூட்டங்களில் மம்தா பானர்ஜி பேசுகையில், நான் பலவீனமாக இல்லை. நான் ஒரு வலிமையான நபர். நான் வாழும் வரை என் தலையை உயரமாக வைத்திருப்பேன். நான் வாழும் காலம் வரை ஒரு ராயல் பெங்கால் புலி போல் வாழ்வேன். பா.ஜ.க. விவசாயிகளை கொள்ளையடிப்பார்கள் மற்றும் அவர்களிடமிருந்து நிலத்தை பறித்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு ஒன்றும் மிச்சமில்லை. விவசாயிகள் விதைத்து அறுவடை செய்வார்கள் அவர்கள் (பா.ஜ.க.) எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து (விவசாயிகள்) பறிப்பார்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment