
தங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் உளவுத் துறை அமைச்சா் மஹ்மூத் அலாவி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் எரிசக்தி பெறுவதற்கானவை மட்டுமே. அணு ஆயுதங்கள் தயாரிக்கக்கூடாது என்று மதகுரு அயதுல்லா கமேனி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
எனினும்,
தொடா்ந்து பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ஈரானை மேலை நாடுகள் அணு
ஆயுதத் தயாரிப்புப் பாதைக்கு திருப்பினால், அதற்கு அந்த நாடுகள்தான்
பொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.
No comments:
Post a Comment