
மம்தா பானர்ஜி வங்க புலி அல்ல, அவர் நிலைமை பூனை போல மாறி விட்டது என்று மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், நான் ஒரு வலிமையான நபர். நான் வாழும் வரை என் தலையை உயரமாக வைத்திருப்பேன். நான் வாழும் காலம் வரை ஒரு ராயல் பெங்கால் புலி போல் வாழ்வேன் என்று தெரிவித்தார். மம்தாவின் இந்த பேச்சை பா.ஜ.க. கிண்டலடித்துள்ளது.
மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் இது குறித்து கூறியதாவது: மம்தா பானர்ஜி ஒரு ராயல் வங்க புலி அல்ல, அவரது நிலை பூனை போல மாறி விட்டது. அவரது உறுப்பினர்களோ அல்லது நிர்வாக அதிகாரிகளோ அவருக்கு பயப்படவில்லை. மம்தா பானர்ஜியின் சர்வாதிகார மனப்பான்மை ஒரு ஜனநாயகத்தில் மேலோங்கவில்லை.

மேற்கு வங்கத்தில் கூட்டங்கள் அல்லது யாத்திரைகள் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி இல்லை. அவர் பிரதமருக்கு எதிராக தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அரசாங்க நிகழ்ச்சிகளில் அரசியல் உரைகளை பேசுகிறார். கலியா சவுக், துலாகர், படோரியா, அசன்போன், பசிர்ஹாட் அல்லது ராணிகஞ்ச் பகுதிகளில் ஏராளமான கலவரங்கள் நடந்துள்ளன. வங்கத்தில் இனவாத வன்முறை நடைபெறுகிறது. ஏனெனில் இது போன்ற கூறுகளுக்கு இங்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment