
புதுடில்லி: லோக்சபாவில் தினமும் கூச்சல், குழப்பம் அரங்கேறி வருகிறது.
விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில்
ஈடுபடுகின்றனர். தி.மு.க., - எம்.பி.,க்கள், மிகவும் ஆக்ரோஷமாக, சபாநாயகர்
இருக்கைக்கு அருகே சென்று, கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.சமீபத்தில்,
சபையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதைப் பார்த்து, கடும்
கோபத்துடன், அவர்களை நோக்கியுள்ளார்.உடனே, தி.மு.க., - எம்.பி., ஒருவர்,
அமித் ஷாவின் இருக்கைக்கு சென்று, அவரிடம் சில நிமிடங்கள் பவ்யமாக
பேசியுள்ளார்.இது, மற்ற தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு சந்தேகத்தை
ஏற்படுத்தி விட்டது. 'அவர் எதற்கு, அமித் ஷாவிடம் பேசினார்' என,
தங்களுக்குள் முணு முணுத்தனர்.
அந்த எம்.பி., மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,
அவர், அமித் ஷாவிடம் பவ்யம் காட்டியது, மற்ற, தி.மு.க., -
எம்.பி.,க்களுக்கு, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.மற்றொரு பக்கம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், அடிக்கடி, காங்கிரஸ்
எம்.பி., ராகுலுடன் பேசுவதும், தி.மு.க., வினரை சந்தேகத்தில்
ஆழ்த்தியுள்ளது. 'தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி, கமலுடன்
கூட்டணி அமைப்பது தொடர்பாக, அவர்கள் ராகுலிடம் பேசுகின்றனரோ' என,
தி.மு.க.,வினர் சந்தேகப்படுகின்றனர்
No comments:
Post a Comment