
திருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என,
திருப்பூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி பேசினார்.திருப்பூர்,
காங்கயம் கிராஸ் ரோட்டில் வாகன பிரசாரத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி
பேசியதாவது:கடந்த, 10 ஆண்டாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க., அரசு எந்த
அடிப்படை வசதியும் செய்யவில்லை. புதிய வேலை வாய்ப்பு உருவாகவில்லை. தொழில்
முதலீடு எதுவும் வரவில்லை.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும்
அறிவிப்புகளை தான், பழனிசாமி அரசு செய்கிறது. முத்தலாக் தடைச் சட்டம்
வரவேற்கத்தக்கது. ஆனால், இஸ்லாமிய ஆண்களை மட்டுமே இச் சட்டம் தண்டிக்கிறது.
மற்ற மதங்களைச் சேர்ந்தோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment