
திருப்பூர்;தனியார் நிதி நிறுவனங்கள், தவணைகளை செலுத்த 'டார்ச்சர்'
செய்வதாக, பெண்களிடையே புகார் எழுந்துள்ளது. போதிய வருவாய் இல்லாததால்,
கடன் முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், 'மைக்ரோ'
பைனானஸ் என்ற பெயரில் இயங்கும் பல நிதி நிறுவனங்களிடம் இருந்து, பெண்கள்,
கடன் பெற்று, தவணைகளை திருப்பி செலுத்தி வருகின்றனர்.கொரோனா பரவலுக்கு
பின், நிதி நிறுவனங்கள், தவணை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. வருமானம்
இல்லாமல், மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், மூன்று முதல் நான்கு மாதம்
வரை, கடன் தவணைகளை வசூலிக்காமல் கால அவகாசம் அளிக்கப்பட்டது.அதேவேளையில்,
அந்த கால இடைவெளி காலத்துக்கும் வாங்கிய கடனுக்கு ஏற்ப, வட்டி விகிதம்
அதிகரிக்கவும் நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால், நான்கு
மாதங்களாக நிதி நிறுவனங்கள், கடன் தொகையை வசூலிக்க முழு தீவிரம் காட்டி
வருகிறது.
ஆனால், குழுவாக சேர்ந்து தொகையை செலுத்த முன்வராத
நிலையில், குழுவை சேர்ந்த பெண்களின் வீடுகளுக்கு, நிதிநிறுவன ஊழியர்கள்
நேரில் சென்று, அவர்களிடம் தவணை தொகை பெறுவதில் முனைப்பு
காட்டுகின்றனர்.பணம் தற்போது இல்லை என கூறும் பெண்களை, சில மணி நேரம்
மட்டுமே கால அவகாசம் அளித்து, எப்படியாவது பணத்தை கட்ட வேண்டும் என,
நெருக்கடி தருகின்றனர். பகல் நேரத்தில் மட்டுமின்றி, இரவு 9:00 மணி வரை கூட
பணம் வசூலிப்பதில், தீவிரம் காட்டுவதால், பெண்கள் மன உளைச்சல்
அடைகின்றனர்.இது குறித்து, மகளிர் குழு பெண்கள் கூறியதாவது:கொரோனா நோய்
பாதிப்புக்கு முன்பு வரை, நிலையான வருமானம் வந்தது; அதை வைத்து, கடன்
தவணைகளை சரியாக செலுத்தினோம். இப்போது பாதிப்பு ஓரளவு நீங்கியிருந்தாலும்,
வேலை இருப்பதில்லை.குடும்ப தேவைகளை சமாளிக்க முடியாமல், அதிக வட்டி
என்றாலும், நிதி நிறுவனங்களில் கடன் பெறுகிறோம். ஆனால், இப்படி தவணை
கட்டியே ஆக வேண்டும் என, மணிக்கணக்கில் கால அவகாசம் தந்து நிர்ப்பந்தம்
செய்வது, 'டார்ச்சர்' ஆக உள்ளது, என்றனர்.'போலீசில் புகார் தரலாம்'மாவட்ட
முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் கூறியதவாது:அரசு மற்றும் தனியார்
வங்கிகள் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கடன் தவணைகளை
வசூலிப்பதில் சலுகை காட்டுகிறது. ஆனால், தனியார் நிதி நிறுவனங்கள்,
வங்கிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த நிதி நிறுவனங்கள் தவணை
வசூலிப்பதில் பிரச்னை செய்வதாக எங்களுக்கு புகார் வரும்பட்சத்தில்,
சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு, கடன்தாரர்களுக்கு கூடுதலாக ஆறு
மாதங்கள் வரை, கால அவகாசம் அளிக்குமாறு, கடிதம் அனுப்புகிறோம். பிரச்னை
அதிகமானால், கடன்தாரர்கள் போலீசில் புகார் அளிக்கலாம், என்றார்.
No comments:
Post a Comment