
சென்னை: அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா மீதான விசாரணை காலத்தை,
மேலும், மூன்று மாதங்கள் நீட்டிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக
தெரிகிறது.அண்ணா பல்கலையின் துணை வேந்தராக, சுரப்பா பதவியேற்றது முதல்,
பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான பாடத்திட்டம்,
தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்நிலையில், சுரப்பா
நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக, உயர் கல்வி துறை குற்றம் சாட்டியது.
இதுகுறித்து விசாரிக்க, ஆணையம் அமைத்து, உயர் கல்வி துறை உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், பல்கலை பதிவாளர்
கருணாமூர்த்தி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் மற்றும் புகார்
அளித்தவர்களிடம், விசாரணை நடத்தியது.ஆணையத்திற்கான கால அவகாசம், நாளையுடன்
முடிய உள்ளது.
ஆனால், விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, கால அவகாசத்தை
மேலும் நீட்டிக்க, அரசு முடிவு செய்து உள்ளது. கால அவகாசத்தை
நீட்டிக்குமாறு, ஆணையத்தில் இருந்து, அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மேலும் மூன்று மாதங்கள் அவகாசத்தை நீட்டிக்க, அரசு முடிவு
செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment