Latest News

774 கிலோ தேங்காய் ஏலம் ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை

  மடத்துக்குளம் : மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், 1,520 காய்கள், 27 ஆயிரத்து, 757 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. ஒரு குவிண்டாலுக்கு அதிகப்பட்ச விலையாக, 3,700 ரூபாயும், குறைந்தபட்சமாக, 3,000 ரூபாயும், சராசரி மதிப்பாக, 3,500 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டது.இதுகுறித்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மேரிஹில்டா கூறுகையில், ''இந்த வாரம் நடந்த ஏலத்தில், ஏழு குவிண்டால், 74 கிலோ தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதுவரை மொத்தம், 15,087 தேங்காய், இரண்டு லட்சத்து, 20 ஆயிரத்து 42 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன,'' என்றார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.