Latest News

2021-TIYAவின் அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின்  ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு

 

தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நமது மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவருக்கும்

 *நன்றி...!!! நன்றி..!!! நன்றி...!!! *

வல்ல அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்.

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்.

எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.

 

புனித மிக்க ரமலான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி  தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற TIYAவின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு

 ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா

தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது.

நமது அரசாங்க வழிகாட்டுதலின் படி கோவிட் முன்னெச்சரிக்கை லாக்டவுன் அமலில் இருந்து வரும் காரணத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகவே இந்த வருடம் கீழ்க்கண்ட பொருட்கள் ஃபித்ராவாக விநியோகிக்கப்பட்டது.


மளிகை பொருட்கள்
1. அரிசி 5kg
2. சீனி 1 கிலோ
3. சேமியா ஒரு பட்டை
4. கடல்பாசி 10 கிராம்
5. மசாலா 100 கிராம்
6. முந்திரி,திராட்சை, ஏலம்
7. எண்ணெய் 1/2 லிட்டர்
8. பணமாக ரூ 500/-


மொத்தம் 137 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.



அருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிராத்திக்கின்றோம்.