Latest News

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடிகள்! - ஆக்கப்பூர்வமானவையா.. அவசியமற்றவையா? விவாதிக்கலாம் வாங்க!

 

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் அதிரடியான கருத்துகள் ஒருபுறம் வரவேற்பையும் மறுபுறம் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொள்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிரான பல கருத்துகளை முன்வைத்தார்.

https://forms.gle/dFV2FxThcnmwx9HK6

ஜக்கி வாசுதேவ்

சுய விளம்பரத்துக்காகவும், சுய முன்னேற்றத்துக்காகவும், அரசியலுக்காகவும் மதத்தையும் கடவுளையும் பயன்படுத்துபவர் என்று ஜக்கி வாசுதேவை விமர்சித்த பழனிவேல் தியாகராஜன், ஜக்கி வாசுதேவை ஓர் 'ஒட்டுண்ணி' என்று சாடினார். மேலும், வனத்துறை நிலத்தை ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார். பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சர் ஆன பிறகு, இந்த காணெளி வைரலாகி, பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.

https://forms.gle/dFV2FxThcnmwx9HK6

பின்னர், ஜக்கி வாசுதேவுக்கு எதிரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கருத்துகளைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, 'யார் இந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரது குடும்பப் பின்னணி தோண்டப்படும்' என்று ஆவேசத்துடன் கூறினார்.

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது, 'வெறிநாய்க்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது' என்று பதிலளித்தார். அவரது அந்த பதிலை, திராவிட இயக்க ஆதரவாளர்களும் முற்போக்காளர்களும் கொண்டாடினார்கள். மற்றொருபுறம், அமைச்சர் பதவியை வகிக்கும் ஒருவர், மற்றொரு கட்சியின் தலைவருக்கு எதிராக இத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அரசியல் மற்றும் ஆட்சி ரீதியான தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் அதிரடியான இத்தகைய செயல்பாடுகள் குறித்த காணொளி விவாத நிகழ்ச்சியை ஜூனியர் விகடன் நடத்துகிறது. 12.06.2021 (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கட்டணமின்றி அனைவரும் பங்கேற்கலாம்.

முன்பதிவுக்கு https://forms.gle/dFV2FxThcnmwx9HK6 என்ற இணைப்பை சொடுக்கவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.